தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலவச அல்லது மானிய விலையில் ரேஷன் பொருட்களைத் தொடர்ந்து பெற, இனி ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை e-KYC செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை ‘மேரா ரேஷன்’ மற்றும் ‘ஆதார் ஃபேஸ் ஆர்டி’ செயலிகள் மூலம் வீட்டில் இருந்தே செய்யலாம். ரேஷன் சலுகைகள் சரியான பயனாளிகளுக்குச் சென்று சேருவதை உறுதி செய்ய இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.