திருத்தணி பகுதியில் விவசாயத்திற்கும் வீட்டு உபயோகத்திற்கும் இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண்ணைச் செங்கல் சூளை வியாபாரிகள் முறைகேடாகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆன்லைன் மூலம் அனுமதி பெற்று, டிராக்டர்கள் மூலம் அதிகளவில் மண் கடத்தப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டிய வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.