தீய திராவிட மாடல் திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வாகும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 8ஆம் வகுப்பு மாணவன் மீதான தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளதோடு, தடுத்த ஆசிரியரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள், கத்தியுடன் பள்ளிக்கு வரும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் சட்டமும், சமூகமும் சீர்கெட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.