மேற்கு வங்காளத்தில் பாஜக அரசு ஆட்சியமைத்ததை தொடர்ந்து, அங்கீகாரம் பெறாத மதரசாக்கள் குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அரசு அனுமதி பெறாமலும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் இயங்கி வந்த 252 மதரசாக்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறிய 100 மதரசாக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பதிலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சுதிராம் துடு தெரிவித்துள்ளார்.