7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை

7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய பேரூராட்சிகள் தற்போது நகராட்சிகளாக தரம் உயர்ப்பட்டுள்ளன. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டம் மற்றும் பிற காரணங்கள் அடிப்படையிலும், இந்த 7 பேரூராட்சிகளின் வரலாறு மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம், வணிகம் போன்ற தொழில் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி