கரூர் குடும்பத்தினருக்கான அரசு பணி ரத்து.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணிகளை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதிகள் மற்றும் அதிகார வரம்புக்கு உட்பட்டே கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, அரசு பிறப்பித்த அரசாணையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி