திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவரது சகோதரி புவனேஸ்வரிக்கு தற்காலிக செவிலியர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு இலவச வீடு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டது. இதனை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது ஃபர்வேஸ் நேரில் சென்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.