குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலை.. காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த 1½ வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் நிலக்கடலை சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அதிநவீன கருவியின் உதவியுடன் அறுவை சிகிச்சை இன்றி மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த நிலக்கடலையை அகற்றினர். சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் மூச்சுத் திணறல் முற்றிலும் குணமாகி, ஆக்சிஜன் அளவும் சீராக உள்ளது.

தொடர்புடைய செய்தி