புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நேற்று மாலை இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பள்ளி மாணவிகள் உள்பட 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: பாலிமர்