சிவகங்கை மாவட்டம் கீழ ராங்கியம் கிராமத்தில் அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 35 பயணிகள் படுகாயமடைந்த நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழையனூர் கிராமத்தில் இருந்து மதுரை நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விசாரணையில், 10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
நன்றி: பாலிமர்