திருச்சியில் இருந்து சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. சென்னை நோக்கி 30-க்கும் மேற்பட்டோருடன் சென்ற அரசுப் பேருந்து பெரம்பலூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை (பிப்., 22) அதிகாலை 2.45 மணியளவில் டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றாலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் காயமடைந்தனர். திருச்சி மாநாட்டை முடித்துவிட்டு திரும்பிய நாதகவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.