கோவை தொப்பம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த காயத்ரி என்ற 25 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.