ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இசையனூரில் இருந்து ஆற்காடு சென்ற அரசு பேருந்தில் இருந்து புகை வெளியேறி திடீரென தீப்பற்றியது. உடனே பயணிகள் அனைவரும் அலயடித்துக்கொண்டு இறங்கி ஓடினர். பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.