தமிழகத்தில் அரசுப் பேருந்து விபத்து.. 19 பேர் காயம்

புதுக்கோட்டையில் அரசுப் பேருந்து விபத்தில் சிக்கியதில் 19 பேர் காயமடைந்தனர். இன்று (மார்ச். 20) இலுப்பூரில் இருந்து 28 பயணிகளுடன் கீரனூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது ஆவாரங்குடி பட்டி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 19 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி