சரக்கு வாகனங்கள் கொடைக்கானல் மலைச் சாலையில் பயணிக்கத் தடை

டிசம்பர் 1 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளம் உள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கொடைக்கானல் மலைச் சாலையில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சில வகை ஆம்னி பஸ்கள், டாரஸ் லாரிகள், டிரக்குகள் இனி மலைச் சாலையில் பயணிக்க முடியாது. கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளும் சாதாரண நீளம் கொண்ட பஸ்கள், மினி பஸ்களில் மட்டுமே பயணிக்க முடியும். கார்கள், வேன்களுக்கு தடை இல்லை.

தொடர்புடைய செய்தி

✕
✕