தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இன்று (ஜூலை 31) முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் எந்த கட்சியில் இணைவார், யாருடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தது. இந்நிலையில், இது குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "ஓபிஎஸ்-க்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.