கிண்டி, வடபழனி, குன்றத்தூர், பூந்தமல்லி பகுதிகளை இணைக்கும் மையப்புள்ளியாக போரூர் விளங்குகிறது. போரூர் என்றாலே போக்குவரத்து நெரிசல் என்றாகிவிட்டது. இதற்கு தீர்வு தரும் விதமாக தற்போது புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பாலத்தில் மெட்ரோவும், அதற்கு அடுத்த பாலத்தில் பேருந்து, வாகனங்கள் செல்லும் வகையில் ஈரடுக்கு பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
நன்றி: Thanthi TV