ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி!

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6.25 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார். ஆளுநர் தலைமையில் நடந்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில், 6.50%-ல் இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி