உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கேமிங் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான GTA 6 கேம், வரும் நவம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அதன் தாய் நிறுவனமான Take Two Interactive அதிகாரப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. முன்னதாக 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த தேதி தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த இறுதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.