சிக்கன் பிரியர்களுக்கு நற்செய்தி.. விலை குறைந்தது

சென்னையில் இன்று இறைச்சி விலை சற்று குறைந்துள்ளது. கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.130-க்கும், இறைச்சி ரூ.160-க்கும் விற்கப்படுகிறது. நாட்டுக்கோழிக் கறி ரூ.360-க்கும் விற்பனையாகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.65-க்கும், சில்லறை விலையில் ரூ.5.50-க்கும் விற்பனையாகிறது. ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதன் எதிரொலியாக தமிழகத்திலும் விலை குறைந்துள்ளது. ஆட்டிறைச்சி விலை ரூ.800 ஆக விற்கப்படுகிறது. மீன்கள் விலை ரூ.150 முதல் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி