தமிழ்நாட்டில் விவசாய நிலத்தில் கிடைத்த தங்க புதையல்

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் விவசாய நிலத்தை ஜேசிபி மூலம் சமன் செய்யும் போது, பழங்கால குடுவையில் 86 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலம் ஆதவன் என்பவருக்குச் சொந்தமானது. தகவல் வெளியானதைத் தொடர்ந்து வட்டாட்சியர் 86 தங்கக் காசுகளையும் கைப்பற்றி விசாரணை தொடங்கினார். 1878 இந்திய புதையல் சட்டப்படி, நிலத்தில் புதையல் கிடைத்தால் அதை உடனே அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி