"பெண்களுக்கான பொற்கால திட்டம்": ரூ.2 லட்சம் வரை கடன்!

தமிழக அரசு பெண்களுக்கான பொற்கால திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்குகிறது. அதுவும் ஆண்டு ஒன்றிற்கு வெறும் 5% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். கடன் தொகையை, திருப்பி செலுத்த 3 முதல் 8 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அனுகவும்.

தொடர்புடைய செய்தி