சர்வதேச சந்தையில் தங்கம் $4,710.33-க்கு வர்த்தகம்

ஈரான், அமெரிக்க போர் நிறுத்த எதிரொலியால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 1 அவுன்ஸ் (28 கிராம்) 50 டாலர்கள் உயர்ந்து $4,711-க்கும், வெள்ளி விலை 1 அவுன்ஸ்-க்கு 1.61 டாலர் உயர்ந்து 73.51 டாலர்களுக்கும் விற்பனையாகிறது. இதனால் இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று மேலும் உயர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.113,600-க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி