திருச்சி விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருட்கள், அரிய வகை விலங்கினங்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. கடந்த வாரம் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வந்த 60 பயணிகளிடம் இருந்து சுமார் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலைய கண்காணிப்பாளர்கள் 5 பேர் வேறு பணிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் தங்கம் கடத்தல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.