தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1840 அதிரடியாக உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தம் ரூ.1,840 அதிகரித்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.60-ம் சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்த நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.170-ம் சவரனுக்கு ரூ.1,360-ம் மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170கும் ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕