சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் ரூ.3000 உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஜூன் 10 ஆம் தேதி 22 கேரட் தங்கம் கிராம் ரூ.8,945-க்கும், சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தங்கம் விலை தொடர் உச்சம் கண்டது. இந்நிலையில், இன்று (ஜூன்.14) ஆபரணத் தங்கம் கிராம் ரூ.9,320-க்கும், சவரன் ரூ.74,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.