சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரு நாளில் (நவ., 13) ஒரு கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.11,900-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (நவ., 14) சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.94,720-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.11,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.