ஈரான், அமெரிக்க போர் நிறுத்தத்தால் சர்வதேச சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. போர் காரணமாக சரிந்த தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இன்று (ஏப்., 08) ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் 150 டாலர்கள் உயர்ந்து $4,807.3-க்கும், வெள்ளி ஒரு அவுன்ஸ் 3.66 டாலர்கள் உயர்ந்து $76.43-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,860-க்கும், ஒரு சவரன் ரூ.110,880-க்கும் விற்கப்பட்டது.