தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு

சர்வதேச சந்தையில் இன்று (அக்.21) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 23 டாலர் சரிந்து 4,118 டாலராக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று (அக்.20) தமிழகத்தில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து இன்று தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕