சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையாக சரிந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 165 டாலர்கள் (ரூ.15,396) குறைந்து 4,725 டாலராகவும், வெள்ளி 7 டாலர்கள் குறைந்து 71 டாலராகவும் விற்பனையாகிறது. இதன் எதிரொலியாக, இந்திய சந்தையில் இன்று இரண்டாவது முறையாக மாலை நேர வர்த்தகத்திலும் தங்கம் விலை கணிசமாகக் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.