தமிழ்நாட்டில் தங்கம் விலை சவரனுக்கு இன்று (மார்ச் 04) ரூ.2,120 குறைந்துள்ளது. நேற்று (மார்ச் 03) ஒரு சரவன் ரூ.1,23,720க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் நேற்று ரூ.15,465க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.295க்கும், கிலோ ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி: தந்தி