தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,600 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,600 சரிந்துள்ளது. இன்று காலையில் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,330-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.106,640-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது ஒரு கிராமுக்கு மேலும் ரூ.130 குறைந்து ரூ.13,200-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,05,600-க்கும் விற்கப்படுகிறது. ஈரான், அமெரிக்க போர் எதிரொலியால் தங்கம், வெள்ளி மீதான முதலீடு சரியத் தொடங்கியுள்ளதே விலை குறைவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி