அமெரிக்கா, இஸ்ரேல்–ஈரான் போர் காரணமாக கடந்த இரண்டு நாள்களில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் $20 டாலர் குறைந்து $5,352.60 டாலராக விற்பனையாகிறது. வெள்ளி விலையும் $5 டாலர் குறைந்து $90.36 டாலராக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.