தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாகக் குறைந்து நடுத்தர மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில், இன்று மேலும் ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.