தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,600 உச்சம்

சென்னையில் தங்கம் விலை நேற்று (நவ., 12) ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600 -க்கும் விற்பனையாகி சற்று ஆறுதல் தந்தது. இந்த நிலையில், இன்று (நவ., 13) ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.182-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி