சென்னையில் தங்கத்தின் விலை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று (நவ., 05) ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (நவ., 06) மீண்டும் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.164-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.1 ஆயிரம் உயர்ந்து ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டு வருகிறது.