சர்வதேச சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று (மே.18) தங்கம் விலை பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. 1 அவுன்ஸ்(28g) $57 குறைந்து $4,994-க்கு வர்த்தகமாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 3% சரிந்து 1 அவுன்ஸ் $74.11-க்கு விற்பனையாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலை இன்று நீடித்தால் இந்திய சந்தையில் சவரனுக்கு சுமார் ரூ.1,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்று (மே.18) ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது.