மீண்டும் சரியும் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா?

தங்கம் விலை இன்று (பிப்., 13) இரண்டாவது நாளாக சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,400க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இனியும் சற்று குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி