சென்னையில் தங்கம் விலை நேற்று (நவ., 15) சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.92,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.11,550-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று (நவ., 16) ஞாயிற்றுக்கிழமை என்பதால் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலைகளில் விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என 2 நாட்களில் தங்கம் ரூ.2,800 குறைந்தது குறிப்பிடத்தக்கது.