சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரமாக சரிவில் இருந்த தங்கம் விலை தற்போது உயர்வைச் சந்தித்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 3,884.67 டாலராக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலை 0.56 டாலர் குறைந்து 48.62 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை மாற்றங்களால் உள்ளூர் சந்தையிலும் விலையில் ஏற்றம் ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சென்னையில் தற்போது வரை ஒரு சவரன் ரூ.100,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.