சென்னையில் இன்று (பிப்., 05) ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ரூ.63,240க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.95 உயர்ந்து, ரூ.7,905க்கு விற்பனையாகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.107ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1,07,000 ஆகவும் விற்பனையாகிறது. வரலாற்றில் முதன் முறையாக இன்று சவரன் ரூ.63,000-ஐ கடந்துள்ளதால் சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறியுள்ளது.