சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கு 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.