தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (ஜூன் 06) மாற்றமில்லை. நேற்றைய தினம் (ஜூன் 05) ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனையான நிலையில் இன்றும் அதே விலையில் தொடர்கிறது. அதேபோல் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,130க்கு விற்பனையான நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.114க்கும்,  ஒரு கிலோ ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கடந்த 2 நாட்களில் ரூ.400 உயர்ந்த நிலையில், இன்று மாற்றம் செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்தி