புதுமணத் தம்பதிகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் தவெக-வின் 'தாய்மாமன் சீர்' திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு அதன் மீதான இறக்குமதி வரியை 15% ஆக உயர்த்தியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அரசு அதை மொத்தமாகக் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு திட்டம் தாமதமாகலாம் எனக் கூறப்படுகிறது.