சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ., 20) சற்று குறைந்துள்ளது. நேற்று (நவ., 19) ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.800 குறைந்து, ரூ.92,000-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,600-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.100 குறைந்து, ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.