தங்கம் விலை குறைந்தும் அச்சத்தில் இருக்கும் மக்கள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 14) காலை சவரன் ரூ.65,840-க்கும், மாலை ரூ.560 உயர்ந்து ரூ.66,400-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 15) சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760க்கு விற்கப்படுகிறது. ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று இறங்கியுள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தபோதிலும், வரும் நாட்களில் தங்கம் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி