சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 3,000 வரை சரிந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்று (அக்டோபர் 28) காலை ரூ. 1,200 குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ. 1,800 குறைந்தது. இதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 90,000-க்குக் கீழ் வந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.225 குறைந்து, ரூ.11,075-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ. 88,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி:News18Tamil