தங்க வியாபாரியை கடத்தி ரூ.41 லட்சம் கொள்ளை

கோயம்புத்தூர் மாவட்டம் வாளையார் சோதனைச் சாவடி அருகே தங்க நகை வியாபாரியிடம் இருந்து ரூ.41 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை காரில் கடத்திச் சென்ற கும்பல் ஒன்று பணத்தை பறித்துள்ளது. பின்னர் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்ட லட்சுமணம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி