சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை திடீர் உயர்வு

சர்வதேச சந்தையில் கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் $11.84 அதிகரித்து $4,358.94 ஆகவும், வெள்ளி $1.22 உயர்ந்து அவுன்ஸ் $65.68 ஆகவும் விற்பனையாகிறது. நேற்று உள்ளூர் சந்தையில் ஒரு சவரன் தங்கம் ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கு விற்பனையான நிலையில், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால் தங்கம் விலையில் இனி மேலும் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕