கோர விமான விபத்து - 19 உடல்கள் மீட்பு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த கோர விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 19 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அங்குள்ள ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதி ஆற்றில் விழுந்தது. பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 60 பேர் பயணித்ததாக தெரிகிறது. இதில் 19 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி